Breaking

Friday, August 5, 2016

மனைவியை கொலை செய்து உடல் மீது பெட்டை விரித்து காதலியுடன் 2 நாட்கள் உல்லாசமாக இருந்த கணவன்

மனைவியை கொலை செய்து உடல் மீது பெட்டை விரித்து காதலியுடன் 2 நாட்கள் உல்லாசமாக இருந்த கணவன்




டெல்லியின் ஷாகார்பூர் பகுதியில் தெருவின் ஓரத்தில் கிடந்த சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசியது உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் . போலீசார் வந்து சாக்குபைக்குள்  இரு ஒரு பெண்ணின் உடலை மீட்டனர். அவரது உடலில் ரத்தகாயங்கள் இருந்தது.

விசாரணையில் அந்த உடல் ஹாலிம் என்ற பெண்ணுடையது என தெரியவந்தது. விசாரணையில் ஹாலிமை அவரது கணவர் பைரோஸ்  கொலை செய்தது தெரிய வந்தது

இதனையடுத்து ஹாலிமின் கணவர் பைரோஸை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிமிற்கும், பைரோஸிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே பைரோஸ் பூஜா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஹாலிம் சம்பவத்தன்று அந்த வீட்டிற்கு சென்று தகராறு செய்து உள்ளார் . அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, பைரோஸ் மற்றும் பூஜா ஆகியோர் இணைந்து ஹாலிமை கொன்றுள்ளனர்.

பின்னர் உடலை கட்டில் மீது போட்டு, அதன் மீது பெட்டை விரித்து 2 நாட்களாக அதில் படுத்து வந்துள்ளனர்.

பின்னர் உடல் அழுகி துர்நாற்றம் வீசியதையடுத்து அதனை சாக்கு பையில் போட்டு தெருவில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Comment here