Breaking

Saturday, August 13, 2016

கட்டுமான செலவை நிர்ணயிக்கும் 13 அம்சங்கள்

கட்டுமான செலவை நிர்ணயிக்கும் 13 அம்சங்கள்



வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பணத்தின் அவசியம் மறுக்க முடியாததாக இருக்கிறது. கற்கும் கல்வியானாலும், கட்டும் வீடானாலும் தரமாகவும், அதிக செலவு இல்லாமலும் அமைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஒரே அளவில், ஒரே பகுதியில் கட்டப்பட்ட வீடுகளாக இருந்தாலும் செலவும் ஒரே அளவில் இருப்பதில்லை. வீட்டின் மொத்த செலவை நிர்ணயிக்கும் காரணிகளாக கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிடும்.

 13 அம்சங்களாவன:

1. களிமண், செம்மண், கரிசல்மண், வண்டல்மண், சரளை மண், சுண்ணாம்புக் கல் மண், சிறிய பாறைகள், பெரிய பாறைகள் என்று மண்ணின் தன்மை நூறு அடிகளுக்குள் வேறு விதமாக இருக்கலாம். ஒவ்வொரு மண்ணும் வெவ்வேறு தன்மை கொண்டதால் அதற்கேற்ப அஸ்திவாரம் அமைக்க வேண்டும். எல்லா கட்டிடங்களுக்கும் ஒரே மாதிரி அஸ்திவாரம் இருக்காது.

2. சாலையின் உயரத்துக்கேற்ப அஸ்திவார உயரம் முடிவு செய்யப்பட வேண்டும். தார் சாலை உயரத்துக்கும், மண்சாலை உயரத்துக்கும் ஏற்ப அஸ்திவாரம் அமையும். தாழ்வான பகுதி, நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள பகுதி, பூமியின் அமைப்பு ஆகியவற்றுக்கு தகுந்த முறையில் ‘பேஸ்மெண்ட்’ உயரம் அமையும். 

3. பில்லர்கள், பீம்கள், வழக்கமான கருங்கல் அஸ்திவாரம், ‘கிரேடு பீம்’, பில்லரை மேற்கூரை வரை உயர்த்தி அங்கு ‘ரூப் பீம்கள்’ அமைப்பது ஆகிய முறைகள் இடத்துக்கு தகுந்தவாறு மாறு
படும். 

4. கம்பிகள், ‘பூட்டிங் காலம் போஸ்ட்’, ‘பில்லர் பிளிந்த்’, பீம், ‘தரைத்தள பிளிந்த் பீம்’, ‘பேஸ்மெண்ட் பிளிந்த் பீம்’, ‘லிண்டல்’ அமைப்புகள், கதவு, ஜன்னல்கள், மாடிப்படி அமைப்பு, மேற்கூரை அமைப்பில் கம்பிகள் வடிவம் போன்றவை இடத்துக்கு இடம் மாறுபடும்.

5. செங்கல், ‘பிளை ஆஷ் பிரிக்’, ‘காலம் பிளாக்’, ‘எடை குறைவான பிளாக்’, ‘கிரானைட்’, டைல்ஸ், பட்டி, டிஸ்டெம்பர், மரம், கிரில் வடிவமைப்பு, படிகளுக்கு பதிக்கும் கற்கள், வெளிப்புறம் பதிக்கும் கற்கள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

6. மாடிப்படிகள் வடிவம் மற்றும் உட்புறம் அல்லது வெளிப்புறம் அமைப்பது, சமையல் அறை, பொருட்கள் வைக்கும் அலமாரி, படுக்கை அறை அலமாரிகள், மற்ற அறைகளின் ‘வால் ஷெல்ப்’ அமைப்புகள் போன்றவை வீட்டுக்கு வீடு வேறுபடும்.

7. நிலத்தடி தண்ணீர் தொட்டி, மேல்நிலை நீர் தொட்டி ஆகியவற்றின் நீள, அகலங்களை பொறுத்து செலவுகள் மாறுபடும். செப்டிக் டேங் வடிவமைப்பு, அங்கு பயன்படுத்தும் பொருட்கள், நீரை வெளியேற்றும் முறை அல்லது பூமிக்குள் செலுத்தும் விதம் என்பதும் வெவ்வேறு விதங்களில் இருக்கும்.

8. கூரையின் மேல்பகுதியில் சுருக்கி அமைத்து, சிமெண்ட்தளம் அமைப்பது அல்லது ‘வெதர் கோர்ஸ்’ ஓடு பதிப்பது என்ற முறைகளை கையாளலாம்.

9. ‘காம்பவுண்ட்’ சுவர் அஸ்திவாரம், பூமிக்கு கீழ் ஆழம், பூமிக்கு மேல் உயரம், ‘பைல் பவுண்டேஷன்’, ‘பில்லர் பவுண்டேஷன்’, கருங்கல் பவுண்டேஷன், பில்லர்களை தரைத்தளம் வரை உயர்த்துவது, செங்கல், ‘ஹாலோ பிளாக்’, ‘சாலிட் பிளாக்’, ‘பிளை ஆஷ் பிளாக்’ அமைப்புகள், சிமெண்ட் கலவை பூசுவது போன்ற முறைகளை மேற்கொள்ளலாம்.

10. வெளிப்புற தரைத்தள உயரம், பதிக்கப்படும் டைல்ஸ், ‘பேவர் பிளாக்’, சிமெண்ட் தளம் எனில் கான்கீரிட், சிமெண்ட் கலவை என்ற முறைகள், கழிவுநீர் பரிசோதனை அமைப்புகள், குழாய்கள் இணைப்பு தொட்டிகள், அதன் எண்ணிக்கை போன்றவை.

11. ஒவ்வொரு அறைக்கும் எவ்வித மின்சாதன அமைப்புகள் தேவை, சுவரில் பதிக்கும் பி.வி.சி. பைப் விலை, ‘எலக்ரிக்கல் பாக்ஸ்’, மரத்தால் அல்லது இரும்பால் அமைக்கப்பட்ட ‘பாக்ஸ்கள்’, ‘ஸ்விட்ச்’ மாடல் மற்றும் வடிவங்கள், ஒயர்கள், ‘பாக்ஸ்களின்’ எண்ணிக்கை.

12. கட்டிடத்தின் நரம்பு மண்டலம் ‘பிளம்பிங்’ அமைப்பாகும். கழிவுநீர் குழாய்கள் தரம், உறுதி ஆகியவையும் முக்கியம். ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு பரிசோதனை சேம்பர் அமைப்பதோடு, முதல் மாடியில் அமைக்கப்படும் குளியல் அறைகளின் வடிகால் வசதிகளையும் கவனிக்க வேண்டும்.

13. ‘பெயிண்டிங்’ எனப்படும் வர்ண பூச்சில் நிறைய வகை பொருட்கள் வெவ்வேறு விலைகளில் உள்ளன. ஒரே வர்ணமாக இருந்தாலும் வெவ்வேறு விலைகளில் கிடைப்பதையும் கவனிக்க வேண்டும். பட்டி அல்லது வர்ணங்களின் உட்புறம் மற்றும் வெளிப்புற பூச்சு ஆகியவற்றில் வித்தியாசம் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Comment here