நடிகர் விக்ரமின் மகள் ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர மோதிரத்தை ஒப்படைத்த கால்டாக்சி டிரைவர்
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், தொழில் அதிபர் சி.கே.ரங்கநாதனின் மகன் ரஞ்சித்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் ரஞ்சித், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேரனாகும்.
திருமண நிச்சயதார்த்தத் தின் போது, மணமகள் அக்ஷிதாவுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் அணிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2- ந்தேதி அன்று, ஆயிரம் விளக்கு காதர்நிவாஸ் ரோட்டில் உள்ள ஐஸ்கிரிம் பார்லருக்கு அக்ஷிதா சென் றார். அப்போது அவரது கையில் அணிந் திருந்த வைர மோதிரம் மாயமா னது. இதுபற்றி ஆயிரம்விளக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கால் டாக்சி டிரைவர் ஒருவர் அதனை கண்டெடுத்து ஒப் படைத்துள்ளார். அவரது பெயர் லட்சுமணன் (36). செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த இவர் மனைவி பார்வதி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது நேர்மையை அனைவரும் பாராட்டினர்.
No comments:
Post a Comment
Comment here