கிருஷ்ணகிரி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசி விட்டு மர்மநபர்கள் தப்பி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பச்சிபாறை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகள் புவனேஸ்வரி பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. தோட்டக்கலை படித்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வரி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவர் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு தாயார் சென்று பார்த்த அவரின் முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டு புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆசிட்டில் நீர்மத்தன்மை அதிகமாக இருந்ததால் காயம் ஆழமாக ஏற்படவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார்.
சிகிச்சைக்கு பின் புவனேஸ்வரி வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவி புவனேஸ்வரி மீது ஆசிட் வீசிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
Copyright @ dinakaran.com
No comments:
Post a Comment
Comment here