Breaking

Sunday, July 17, 2016

‘வரிசையை தவிருங்கள், நேரத்தை மிச்சப்படுத்துங்கள்’ “காகிதம் இல்லா ரெயில் டிக்கெட் சேவையை பயன்படுத்துங்கள்”

‘வரிசையை தவிருங்கள், நேரத்தை மிச்சப்படுத்துங்கள்’ “காகிதம் இல்லா ரெயில் டிக்கெட் சேவையை பயன்படுத்துங்கள்”



‘வரிசையை தவிருங்கள், நேரத்தை மிச்சப்படுத்துங்கள்’ என்றும், காகிதம் இல்லா ரெயில் டிக்கெட் சேவையை பயன்படுத்துங்கள் என்றும் பயணிகளுக்கு, தெற்கு ரெயில்வே சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

காகிதம் இல்லா ரெயில் டிக்கெட்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை கோட்டத்தில் மின்சார ரெயில் பயணிகளிடம், காகிதம் பயன்பாடு இல்லாமல் செல்போனில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் வசதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடந்த மாதம் 23-ந்தேதி முதல் கடந்த 12-ந்தேதி வரை இதுதொடர்பான விழிப்புணர்வு வில்லிவாக்கம், பெரம்பூர், ஆவடி, வேளச்சேரி, திருவான்மியூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், சென்னை சென்டிரல் (மூர்மார்க்கெட்), சென்னை கடற்கரை, தரமணி, தாம்பரம், மாம்பலம், குரோம்பேட்டை மற்றும் பார்க் டவுன் ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டது.

பயணிகள் வரவேற்பு

இதில் ‘வை-பை’ வசதியில் செல்போன் அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது பற்றியும், அந்த அப்ளிகேசனில் உள்ள பல்வேறு சிறப்பு வசதிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதற் காக பிரத்யேகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விழிப்புணர்வில் ஈடுபட்டனர். இதற்கு பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
‘வரிசையை தவிருங்கள், நேரத்தை மிச்சப்படுத்துங்கள்’ என்று பெயரிடப்பட்ட இந்த விழிப்புணர்வின்போது மட்டும் 12 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். அப்ளிகேசன் தொடர்பான சந்தேகங்களை பயணிகள் தொழில்நுட்ப குழுவிடம் கேட்டு அறிந்துகொண்டனர். யூடிஎஸ். அப்ளிகேசனை பயன்படுத்துவது தொடர்பாக ‘அப்வே’ என்ற வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது. சென்னை கோட்ட மேலாளர், கோட்ட முதுநிலை மேலாளர், தலைமை வணிக மேலாளர் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூகவலைத்தளங்களிலும் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டது.

நேரத்தை மிச்சப்படுத்துங்கள்

‘யூடிஎஸ்’ செல்போன் அப்ளிகேசன் மூலம் தற்போது சென்னை சென்டிரல், சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் கும்மிடிப்பூண்டி வரை மாதாந்திர சீசன் டிக்கெட் உள்பட மின்சார ரெயிலுக்கான டிக்கெட்டுகளை எடுத்து பயணிகள் பயன்படுத்த முடியும். இந்த காகிதம் இல்லாத ரெயில் டிக்கெட் திட்டத்தில் பயணிகள் தங்களை பயன்படுத்தி வரிசையை தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Comment here