பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு நடிகர் கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தவறி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு முதுதண்டுவடம், கால்எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் சில வாரங்கள் அவர் ஓய்வில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை முடித்து கடந்த வாரம் வீடுதிரும்பினார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Comment here