குடும்ப பிரச்சனை, வீட்டில் வறுமை, தொழிலில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த எளிய பரிகாரம் கைகொடுக்கும்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு சிறிது தொலைவில் உள்ள தென்னாங்கூரில் ஞாயிறு தினத்தன்று ருக்குமாயி - பாண்டு ரங்கனை, தொடர்ந்தார் போல் மூன்று வாரம் தரிசிக்க வேண்டும்! இராஜ அலங்காரத்துடன் கண்கொள்ளா அழகு கொண்ட எம்பெருமானை தரிசிக்கலாம்!
திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் நாட்ரம்பள்ளி அருகில் மெயின் ரோட்டில் உள்ள புற்றுக்கோயில் ஆலயம்! புற்றிற்கு மஞ்சள் குங்குமம் செலுத்தி, அர்ச்சனை செய்து ஒன்பது நெய் தீபமேற்றி வணங்க வேண்டும். பரிகார முறைப்படி, இருபது நிமிடம் அமர்ந்து இருபத்தோராம் நிமிடம் கோயிலிலிருந்து வந்துவிட வேண்டும்.
திருவாரூர் சிவாலயம்.
வேதாரண்யம் - சிவாலயம்
சிக்கல் - சிங்கார வேலர் ஆலயம்.
எண்கண் - முருகர் ஆலயம்.
ஆகிய ஆலயங்கள் குடும்பப் பிரச்சனை, சிக்கல், வறுமைத் தீர்க்கும் பாவங்களை நீக்கும் அதிமுக்கியமான திருத்தலங்களாகும்.
No comments:
Post a Comment
Comment here