நடுரோட்டில் பைக்கின் முன்புறம் காதலியை உட்கார வைத்து கொஞ்சி விளையாடிய காதலன்!

டெல்லி: பரீதாபாத்தில் நடு ரோட்டில் டிராபிக் சிக்னலில் பைக் நின்ற சமயத்தில், பைக்கின் முன்புறம் காதலியை உட்கார வைத்து அவருக்கு முத்த மழை பொழிந்து கொஞ்சிய விளையாடி காதலனின் வீடியோ காட்சி வைரல் ஆகியுள்ளது. சுற்றிலும் வாகனங்களும், அதில் மக்களும் குவிந்திருக்க அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இருவரும் கொஞ்சிக் குலாவியது செம ரொமான்டிக்காக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இருவருக்கும் இளம் வயதுதான் இருக்கும். அந்தப் பெண்ணை பைக்கின் முன்புறம் உட்கார வைத்துள்ளார் அந்த இளைஞர் அவரும், தனது காதலனைச் சுற்றிக் கால்களைப் போட்டபடி அமர்ந்துள்ளார். காதலிக்கு முத்தமிடுகிறார் காதலன். அதை செல்லமாக தடுக்கிறார் காதலி. அதைத் தொடர்ந்து கட்டிப்பிடிக்கிறார். காதலியின் தலை முடியைக் கலைத்து விளையாடுகிறார் காதலர். இப்படியாக நீடிக்கிறது இந்த காதல் விளையாட்டு. சுற்றிலும் இருப்பவர்கள் என்னடா நடக்குது இங்கே என்ற ரீதியில் அதிர்ச்சியடைந்து பார்க்கின்றனர். ஆனால் அது இந்தக் காதலர்களுக்கு கண்ணிலேயே படவில்லை. இதை யாரோ ஒரு புண்ணியவான் செல்போன் வீடியோவில் படமாக்கி நெட்டில் போட இப்போது இது வைரல் ஆகியுள்ளது.
No comments:
Post a Comment
Comment here