Breaking

Friday, July 15, 2016

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கான கால அட்டவணை அறிவிப்பு

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கான கால அட்டவணை அறிவிப்பு




இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும்  நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 3, 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் நடைபெறும் கால அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் போட்டி நவம்பர்  9 ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் 17 ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும்,  3-வது டெஸ்ட் 26 ஆம் தேதி மொஹாலியிலும், 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 8- ஆம் மும்பையிலும், 5-வது டெஸ்ட் போட்டி 16 ஆம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது.

3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 15 ஆம் தேதி புனேவில் நடைபெறுகிறது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 19 ஆம் தேதி கட்டாக்கிலும்,  3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில்  22 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 20 ஓவர் போட்டி ஜனவரி 26 ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. 2-வது 20 ஓவர் போட்டி 29 ஆம் தேதி நாக்பூரிலும், 3-வது போட்டி பிப்ரவரி 1 ஆம் தேதி பெங்களூரு மைதானத்திலும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Comment here