Breaking

Friday, July 15, 2016

​எஜமானரின் குடும்பத்திற்காக 4 நாகங்களுடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்த நாய்!

​எஜமானரின் குடும்பத்திற்காக 4 நாகங்களுடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்த நாய்!




“மனிதனின் சிறந்த நண்பன் நாய்” என்ற சொல்லிற்கேற்ப வளர்த்தவரின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நாகப்பாம்புகளுடன் போராடி சண்டையிட்டு நாய் ஒன்று வீர மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தின் சேப்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் திபாகர் ரய்தா, இவரின் வீட்டில் டாபர் மேன் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இவரின் வீட்டை மிகவும் பாதுகாக்கும் வேலையை பொறுப்புடன் கவனித்து வந்தது அவரின் செல்ல நாய்.

கடந்த திங்கள் கிழமை அன்று அருகிலிருந்த காட்டுப்பகுதியில் இருந்து படையெடுத்த 4 நாகப்பாம்புகள் திபாகர் ரய்தாவின் வீட்டிற்குள் புகுந்தது. இதனை கண்ட அவரின் வளர்ப்பு நாய் அந்த 4 பாம்புகளுடன் கடும் சண்டையிட்டது. சண்டையின் முடிவில் 4 நாகப்பாம்புகளையும் கொன்ற நாய், பாம்புகள் கடித்ததில் ரத்தத்தில் விஷம் கலந்ததால் சிறிது நிமிடங்களில் சுருண்டு விழுந்து இறந்தது.

வீட்டிற்குள் நாகப்பாம்புகளை நுழைய விடாமல் தடுத்து திபாகர் ரய்தாவின் குடும்பத்தை சேர்ந்த 8 பேரையும் காப்பாற்றியிருக்கிறது அந்த நாய். நாயின் வீரத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் மலர்கள் தூவி, அதனை அடக்கம் செய்து மரியாதை செலுத்தினர்.

சமீபத்தில் சென்னை அருகே குன்றத்தூரில், மருத்துவ மாணவர் ஒருவர் நாய் ஒன்றை தான் தங்கியிருந்த வீட்டின் 4வது தளத்தில் இருந்து தூக்கி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வேளையில், இச்சம்பவம்

நாயை மாடியில் இருந்து வீசி எறியும் ஆறறிவு ஜீவன்கள் இருக்கும் இக்காலத்தில் தன் உயிரை ஈந்து எஜமானரின் குடும்பத்தையே காப்பாற்றியிருக்கிறது இந்த ஐந்தறிவு ஜீவன்.

No comments:

Post a Comment

Comment here