சரவணன் மீனாட்சி- 3: சரவணனாக நடிக்கும் சன் மியூசிக் ரியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியலின் 3வது பகுதி திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. 3வது பகுதியில் ஹீரோ சரவணனாக நடிக்கப் போகிறார் சன் மியூசிக் விஜே ரியோ. மீனாட்சியாக நடிப்பது அதே ரக்ஷிதாதான். சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர். கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 1200 எபிசோடுகளை கடந்து இன்னும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாவது பகுதி இன்றுடன் முடிவடையப் போகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த களத்தை நோக்கி பயணிக்க உள்ளது. சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர். சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பகுதியில் சரவணனான இர்பான் நடித்தார். அப்புறம் வெற்றி நடிக்க, வேட்டையன் கவின் மீனாட்சியை மணக்க, சீரியல் தொடர்ந்தது. கவின் மற்றும் ரக்ஷிதா சீரியலை நகர்த்தினர். இப்போது மீண்டும் சரவணன் வந்து மீனாட்சியை கேட்பதாக கதை நகர்கிறது.
சரவணன் மீனாட்சி
இரண்டு தலைமுறை சரவணன் மீனாட்சி காதலைப் பற்றி சித்தரித்த இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைகிறதோ என்று எண்ணிய ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
சரவணன் மீனாட்சி 3
இத் தொடரின் அடுத்த கட்டமாக முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் வேறொரு சரவணன் மீனாட்சியை மையமாக கொண்டு மூன்றாவது பாகம் வரும் திங்கட்கிழமை, ஜுலை 18 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
சன் மியூசிக் ரியோ
சரவணன் மீனாட்சி மூன்றாவது பாகம் என்றவுடன் அடுத்த சரவணன் மீனாட்சியாக நடிக்கப் போகிறார்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த முறை சரவணன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது சன் மியூசிக்கின் மிக பிரபலமான தொகுப்பாளர் ரியோ.
அதே மீனாட்சிதான்
பாரம்பரிய கிராமத்து பெண்ணாக வலம் வந்து ரசிகர்கள் மனத்தை கொள்ளை கொண்ட நடிகை ரக்ஷிதா தான் அடுத்த பாகத்தின் மீனாட்சியாக நடிக்க உள்ளார். முற்றிலும் மாறுபட்ட இந்த மூன்றாவது பாகம் வரும் ஜுலை 18, இரவு 8.30 மணி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
ரியோவின் சீரியல் பயணம் \
ஈரோடுக்காரரான ரியோவிற்கு சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற ஆசை. அதே ஆசையோடு சென்னைக்கு வண்டியேர, விஜய் டி.வி-யோட ‘புதுமுகம்' நிகழ்ச்சி, ‘கனாகாணும் காலங்கள்' சீரியலில் நடித்தார். சன்மியூசிக்கில் ‘சுடச் சுட சென்னை' தட்ஸ் ஆல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் எக்கச்சக்க ரசிகர்களை கைவசம் வைத்திருக்கிறார்.
ரியோவின் சினிமா ஆசை
சினிமாவில் வில்லனாக நடிக்க வேண்டும் என்பது ரியோவின் ஆசை. ஃபைட் பண்ணி, டூயட் பாடுற ஹீரோவா இருக்கிறது எனக்கு செட் ஆகாது. வில்லன்தான் என்னோட சாய்ஸ் என்கிறார் ரியோ. சரவணன் மீனாட்சியில் இவர் நீடிப்பாரா அல்லது சினிமா சான்ஸ் கிடைத்தால் பாதியில் வெளியேறி விடுவாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
ஐலவ் யூ சொல்ல ஆசை
நான் யாருக்கும் ரோஜாப்பூ நீட்டினது இல்லை. ஆனா, நிறைய பொண்ணுங்க என்கிட்ட ஐ லவ் யூ சொல்லியிருக்காங்க. நானும் ஜாலியா ஸேம் டு யூ னு சொல்லிடுவேன். கண்டிப்பா எனக்கும் லவ் மேரேஜ் பண்ணிக்கணும்னுதான் ஆசை. ஆனா, எனக்கான தேவதையை இன்னும் மீட் பண்ணலை!" ஆனால் ஹன்சிகா கிட்ட ஐ லவ் யூ சொல்லணும் என்கிறார் ரியோ. இனி நிறைய முறை மீனாட்சிக்கு ஐ லவ் யூ சொல்லலாம்.
No comments:
Post a Comment
Comment here