Breaking

Tuesday, July 26, 2016

32 வருடங்களுக்கு முன் முறிந்து போன காதல் மகளால் மீண்டும் இணைந்த காதல் ஜோடி

32 வருடங்களுக்கு முன் முறிந்து போன காதல் மகளால் மீண்டும் இணைந்த காதல் ஜோடி




கேரள மாநிலத்தில் ஆதிரா தாத்தன் என்ற பெண் தனது குடும்பத்தினரின் சம்மததுடன் 52 வயது தயாருக்கு அவரது முன்னாள் காதலனை திருமணம செய்து வைத்து உள்ளார்.தனது தயாரின் காதல் கதை குறித்து தனது பேஸ்புகில் அவர் கூறி இருப்பதாவது:-

1984-ம் வருடம்  கொல்லம் அருகே உள்ள ஒசிரா கிராமத்தில் அனிதா 10ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். அவரது தந்தை ராணுவத்தில் உதவி என்ஜினியராக பணியாற்றி வந்தார்.அப்போது அங்கு அனிதாவுக்கு  டியூசன் ஆசிரியராக இருந்தவர் விக்ரமன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆவார்.

கட்சி தொடர்பான கூட்டங்களில் அனிதாவும், விக்ரமனும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் மணமகன் மிகவும் வயது முதியவராக இருந்த காரணத்தால், அனிதாவின் தந்தை திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்துவிட்டார். மேலும் குடும்ப சூழலை எடுத்துக் கூறி, வேறொரு இடத்தில் அனிதாவை திருமணம் செய்து வைத்தார்.

இதனால் மனமுடைந்த விக்ரமன், அந்த ஊரை விட்டே சென்று விட்டார். திருமண்ம செய்து கொள்ளாமல் தன்னை கட்சிக்காக அர்பணித்து வாழ்ந்து வநதார்.   திருமண வாழ்க்கையில் அனிதாவிற்கு ஆதிரா என்ற பெண் பிறந்தார். அவளின் 8-வது வயதில், குடிக்கு அடிமையாகி அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ஆதிராவையும், அவரது சகோதரியையும் வளர்க்கும் பொறுப்பில் அனிதா தீவிரமாக இருந்தார். எனது தயார் மனது விட்டு சிரித்து நான் பார்த்தது இல்லை.

இதற்கிடையில் விக்ரமன், அதே ஊருக்கு மீண்டும் திரும்ப வந்துள்ளார். அப்போது நடைபெற இருந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதனிடையே ஆதிரா, விக்ரமனை சந்தித்து, நடந்ததை கூறியுள்ளார். தனது தாயின் துயரமிகு வாழ்க்கையை எடுத்துக் கூறி, விக்ரமன் மறுவாழ்வு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தீவிர சிந்தனையை அடுத்து, ஆதிராவின் திருமணத்திற்கு பிறகே இதுகுறித்து யோசிக்க முடியும் என்று கூறியுள்ளார். தனது தாயின் மகிழ்ச்சியே பெரிது என்று எண்ணி, உடனடியாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் அனிதாவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.கடந்த 21ம் தேதி, விக்ரமனும், அனிதாவும் திருமணம் செய்து கொண்டனர். என கூறி உள்ளார்.

32 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு காதல் ஜோடி  மகளின் முயற்சியால் மீண்டும் மண வாழ்க்கையில் சேர்ந்துள்ளது. தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும், தனது தாயின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயார் என்று ஆதிரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Comment here