ஜூலை 22-ல் ரிலீஸ் ஏன்?- 'கபாலி' வெளியீட்டு வியூகங்கள்
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி', ஜூலை 22ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்திருக்கிறார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து, படத்தை தணிக்கைக் குழுவுக்கு திரையிட்டு காட்டினார்கள். 'கபாலி' தணிக்கைக் காட்சி நடைபெறும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. BOFTA-வில் உள்ள திரையரங்கில் தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்து 'யு' சான்றிதழ் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு, "ஜூலை 22ம் தேதி உலகமெங்கும் 'கபாலி' வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார். 'கபாலி' வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்தியளவில் போட்டியின்றி வெளியாகும் 'கபாலி'
இந்தியளவில் 'கபாலி' படத்தோடு எந்த ஒரு படமும் போட்டியிடவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஜூலை 22ம் தேதி 'கபாலி' மட்டுமே வெளியாகிறது.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடும் 'ஐஸ் ஏஜ் 5' ஹாலிவுட் படத்தை ஜூலை 22ம் தேதி வெளியீட்டில் இருந்து ஜூலை 15ம் தேதிக்கு தங்களது வெளியீட்டை மாற்றியிருக்கிறது. 'கபாலி' படத்தையும் வட இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தான் வெளியிட இருக்கிறது.
Copyright @ http://tamil.thehindu.com
No comments:
Post a Comment
Comment here