Breaking

Wednesday, June 29, 2016

வினுப்பிரியா தற்கொலை பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியிட்ட வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

வினுப்பிரியா தற்கொலை பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியிட்ட வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

 


சேலம் மாவட்டம் இளம் பிள்ளையை அடுத்த   இடங்கண சாலையை சேர்ந்தவர் அண்ணாதுரை. விசைத் தறி தொழில் செய்து வருகிறார். 
இவரது   மனைவி மஞ்சு. இந்த தம்பதியின் மகள் வினுப் பிரியா (வயது21).  பி.எஸ்.சி. படித்துள்ள இவர் அங் குள்ள ஒரு  தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து  வந்தார்.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி வினுப்பிரியாவின் மார்பிங்  செய்யப்பட்ட புகைப்படங்கள் ஆபாச மாக  பேஸ்-புக்கில் பரவியது.   இது குறித்து   எஸ்.பி.  அலுவலகத்தில் அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 26-ந் தேதி வினுப்பிரியாவின்  மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படத்துடன் தொடர்புக்கு என அண்ணாதுரையின் செல்போன்   எண்ணும் பேஸ்புக்கில் வெளியானது.  இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை   சங்ககிரி டி.எஸ்.பி. அலு வலகத்திற்கு 27-ந் தேதி  புகார் கொடுக்க சென்றார்.

அப்போது  வீட்டில் தனியாக இருந்த  வினுப் பிரியா  தூக்குப்  போட்டு தற்கொலை செய்து கொண் டார். எந்த தப்பும் செய்யாத போதும் பெற்றோர் கூட நம்ப மறுப்பதால் உயிர் வாழ விருப்பம் இல்லை என அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாரிடம் சிக்கியது.

பின்னர்  வினுப்பிரியா வின்  உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்காக கொண்டு வரப்பட்டது.    அப்போது வினுப்பிரியாவின்  சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், போலீசாரின் அலட்சியத்தால் தங்களது மகள் அநியாயமாக இறந்ததாகவும்  புகார் கூறிய  உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து 2 நாட்கள் முற்றுகைபோராட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங் பேச்சு வார்த்தை நடத்தி சமாதான்ம் செய்தார்.  பின்னர்  அவரது உடலை வாங்கி சென்று  சொந்த ஊரில் தகனம் செய்தனர்.

இதற்கிடையே  போலீஸ் சூப்பிரண்டு   அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டன.  இந்த தனிப் படைகளுடன் ஆலோசனை நடத்திய அமித்குமார்சிங் குற்றவாளிகளை கண்டு பிடிக்க பல ஆலோசனை களையும் வழங்கினார்.

தனிப்படையினர் நடத்திய  முதல் கட்ட விசாரணையில் ஏர்செல் நிறுவன மொபைல் எண் மூலமே ஆபாச படம் பரப்பப்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர்.  பின்னர் இது தொடர்பான 6 பக்க ஐ.பி. எண்களை பெற்று முதன் முதலில் இந்த ஆபாச படங்களை பரப்பியவர் யார்? என்று கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.

அப்போது இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப் பட்டியை சேர்ந்த சுரேஷ் (22) என்பவர் அந்த பேஸ் புக்  ஐ.டி.க்கு அதிக படங்களை அனுப்பியது தெரிய வந்தது. இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் சுரேசை பிடித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில்,  வினுப்பிரியாவின்  புகைப் படங்களை மார்பிங் செய்து வெளியிட்டதை ஒப்புக்கொண்ட  அவர் மேலும் பல  திடுக் கிடும் தகவல்களையும்  போலீசாரிடம்  தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

நானும், வினுப்பிரியாவும் காதலித்து   வந்தோம். கடந்த சில  மாதங்களுக்கு முன்பு  வினுப்பிரியாவுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நான் எவ்வளவோ? எடுத்துக் கூறியும்  என்னை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.  இதனால்  அவரது வீட் டிற்கு சென்றும்  நான் பெண் கேட்டேன், அப்போது அவரது பெற்றோர் சமதானப்படுத்தி என்னை அனுப்பி வைத்து விட்டனர்.

ஆனாலும் காதலி நமக்கு கிடைக்காமல்  போய் விடுவாளோ?   என்ற ஆத்திரம் எனக்கு  ஏற்பட்டது. இதனால் அவரை பழி வாங்க திட்டமிட்டேன். அதன்படி  வினுப்பிரியாவின்  படத்தை  மார்பிங்  செய்து ஆபாசமாக வெளியிட்டேன். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதால்  வீட்டிலேயே முடங்கி   இருந்தேன். ஆனாலும் போலீசார் விசாரித்து கண்டு பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே  சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்க சென்ற  அண்ணதுரையிடம் வில் போன் வாங்கி தரும்படி கூறிய போலீஸ் ஏட்டு குறித்தும் துணை கமிஷனர் ராமகிருஷ்ணன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.  விசாரணையில்    வில் போன் வாங்கியது தெரிய வந்துள்ளதால்   அந்த போலீஸ் ஏட்டு சுரேஷ்குமாரை சஸ்பெண்டு செய்து மாநகர காவல் துறை ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

Comment here