அதிபரின் உத்தரவினால் ஆடையின்றி வேலை செய்யும் மக்கள் சமூக வலைதளங்களில் புகைப்படம், வீடியோ வெளியீடு!
பெலாரஸ் நாட்டின் அதிபரின் உத்தரவினால் ஆடையின்றி வேலை செய்யும் மக்கள், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
ரஷியாவை ஒட்டிய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் கடுமையான நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிக்கிறது. அந்நாட்டின் நாணயமான ‘ருபிள்’-ன் மதிப்பு பெரும்சரிவை சந்தித்துள்ளது. கடுமையான பொருளாதார தட்டுப்பாடும், வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுகிறது. இந்நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தொழில்நுட்பம் தொடர்பான அந்நாட்டின் அதிபர் அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா பேசியபோது விடுத்த உத்தரவானது அவரை சங்கடமான நிலைக்கு தள்ளும் விதமாக அமைந்துவிட்டது.
அவருடைய உத்தரவானது அவரை யாரும் மறந்துவிடாத வண்ணம் செய்துவிட்டது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய லுகான்ஷேகா நாட்டின் ‘இந்நிலையை மாற்ற வேண்டும் என்றால் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆடைகளை கழற்றிவைத்துவிட்டு, வியர்வை சிந்த உழைக்க வேண்டும்’ என்று கூறிஉள்ளார். பேச்சின் போதும் டெவலப் என்பதற்கு பதிலாக அன்டிரஸ் என்று கூறிவிட்டார் போல, உடனடியாக மக்கள் அதிபரின் உத்தரவை ஏற்று ஆடையின்றி வேலை பார்க்க தொடங்கிவிட்டனர். அனைவரும் தங்களுடைய அலுவலகங்களில் ஆடையின்றி வேலை பார்த்து அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். வீடியோக்களையும் வெளியிட்டு உள்ளனர்.
பெலாரஸ் நாட்டில் ரஷிய மொழியே பெருவாரியாக 72 சதவித பேர் பேசுகின்றனர். ஆனால் 12 சதவித மக்கள் பேசும் பெலாரஷியன் மொழி அரசு மொழியாக உள்ளது. பெலாரஷியன் மொழியை பொறுத்தவரையில் ’டெவலப்’ மற்றும் ’அன்டிரஸ்’ உச்சரிப்பு ஒலி ஒரேமாதிரியாக இருக்குமாம். ஆனால் லுகான்ஷேகாவின் கருத்தை சீரியஸ் ஆக எடுத்துகொண்டு மக்கள் பலர் ஆடைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டு, நிர்வாணமாக வேலை செய்ய தொடங்கி விட்டனர். இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதிபரை கேலி செய்யும் விதமாக மிம்களையும் சமூக வலைதளங்களில் மக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Comment here