Breaking

Wednesday, June 29, 2016

எனது மகளின் கடைசி ஆசை நிறைவேற முடியாமல் போய்விட்டது சுவாதியின் தந்தை கண்ணீர் பேட்டி

எனது மகளின் கடைசி ஆசை நிறைவேற முடியாமல் போய்விட்டது சுவாதியின் தந்தை கண்ணீர் பேட்டிசென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர்  சுவாதி, கடந்த வெள்ளிக் கிழமை, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து மிகவும் கொடூரமான முறை யில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இத்துணிகர கொலை சம்பவம் சென்னை மட்டு மின்றி தமிழகம் முழுவதுமே பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சுவாதி கொலை தொடர் பாக முதலில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு விசாரணை சென்னை மாநகர போலீசுக்கு மாற்றப்பட்டது. நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சுவாதியின் குடும்பத்தினர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்தும், துயரத்தில் இருந்தும் மீள முடியாத நிலையில் உள்ளனர். சுவாதியின் தந்தை சந்தானகோபால கிருஷ் ணனுக்கு யாராலும் ஆறுதல் சொல்லி தேற்ற முடிய வில்லை. மகள் கொடூரமாக கொல்லப்பட்டதை அவரால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை.

கண்ணீர் மல்க காணப் படும்  அவர் சுவாதி பற்றி சில தகவல்களை கனத்த இதயத்துடன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

என்மகள் சுவாதி மிக, மிக இரக்கக்குணம் கொண்டவள். சிறு எறும்புக்கு கூட அவள் தீங்கிழைத்தது இல்லை. அவளது மனிதாபிமானம் வியக்க வைக்கும். என் மகள் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை.

தெருவில் யாராவது சிறு குழந்தைகள் பிச்சை எடுப்பதை பார்த்தால் அவள் மனம் வாடிப்போவாள். அது போல சாப்பாட்டுக்கு தவிக்கும் ஏழைகளை கண்டால் மனம் உருகு வாள். இரவு இவர்கள் சாப் பிடாமல் தானே தூங்குவார்கள் என்று கேட்பாள்.

எப்போதும் ஏழைகள் படும் கஷ்டம் பற்றியே பேசுவாள்.அவள் ஆத்மா  தூய்மையானது. அப்படிப் பட்ட பெண்ணுக்கு நேர்ந்த முடிவை, அதுவும் கொடூர முடிவை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

சுவாதி தான் இறந்த பிறகு தனது உடல் உறுப்பு களை தானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். இது பற்றி கூட அவள் என்னிடம் ஒரு தடவை பேசி இருக்கிறாள்.
ஆனால் அவளது கடைசி ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. நுங்கம் பாக்கம் ரெயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அவள் உடல் 2 மணி நேரமாக கிடக்க நேரிட்டதால் அவளது கடைசி ஆசையை என்னால் நிறைவேற்ற இயலவில்லை.
சுவாதி உடலை அன்று மாலைதான் எங்களிடம் ஒப்படைத்தனர். எனவே எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.

நாங்கள் என்ன தவறு செய்தோம்? என் மகள் சுவாதி என்ன தவறு செய் தாள்? அவள் கடவுள் பக்தி நிறைந் தவள். அவள் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலை செய்யும் நிறுவனத்துக்கு சென்று சேரும் வரை காயத்ரி மந்திரம் சொன்னபடி செல்வாள். யாரிடமும் அவர் விரோதமாக நடந்து கொண்டதே இல்லை. ஆனால் இப்போது அவள் கொலை பற்றி பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பல விதமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். ஏன் சமுதாயத்தில்இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று எங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
என்மகள் மரணம் பற்றிய சர்ச்சையை இனி நீடிக்க விட வேண்டாம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக சமூக வலைத் தளங்களில் தேவை இல் லாத கருத்துகளை தெரிவிப்பதை கைவிடும்படி வேண்டுகிறேன்.

சுவாதி என்னிடம் எதையும் மறைக்க மாட் டாள். சந்தேகப்படும்படி அவளைஒருவர் பின் தொடர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் சுவாதி அப்படி எந்த தகவலை யும் என்னிடம் சொல்லவில்லை. அவளை பற்றி வரும் அத்தகைய தகவல்கள் தவறானவை. எந்தஒரு வாலிபரும் அவளை பின்தொடரவில்லை. அத்தகைய தொந்தரவு இருந்திருந்தால் நிச்சயம் அவள் என்னிடம் சொல்லி இருப்பாள்.
தினமும் இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவாள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பாள். அந்த சிரித்த முகத்தை இனி நான் பார்க்கவே முடியாது.
இவ்வாறு சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் கண்ணீர் மல்க கூறினார்.

No comments:

Post a Comment

Comment here