Breaking

Monday, June 6, 2016

பெங்களூர் விமானநிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை தடுத்து நிறுத்தி சோதனை

பெங்களூர் விமானநிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை தடுத்து நிறுத்தி சோதனை


இசை அமைப்பாளர் இளையராஜா, அவரது மகன் கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினர் மங்களூரில் உள்ள சில கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் சென்னை திரும்பு வதற்காக பெங்களூர் விமான நிலையம் சென்றனர். அப் போது அவரது உடமைகளை சோதிப்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத் தினார்கள்.

இளையராஜா குடும்பத் தினர் கொண்டு வந்த பை யில் கோவில் பிரசாதம், உடைத்த தேங்காய் ஆகியவை இருக்கின்றன என்று அதிகாரி களிடம் சொல்லப்பட்டது. தேங்காயுடன் பிரசாதத்தை கொண்டு சொல்ல கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ‘ஸ்கேனிங்’ எந்திரம் மூலம் நீண்ட நேரம் சோதனை செய்தனர். இதற்காக இளையராஜாவையும் தடுத்து நிறுத்தினார்கள்.

இதை கார்த்திக் ராஜா போட்டோ எடுத்தார். அதை அழிக்கும்படி பாதுகாப்பு அதிகாரி கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதுதவிர இளையராஜா மிகப்பெரிய இசை அமைப்பாளர், பல்வேறு தேசி விருதுகளைப் பெற்றவர்.

அவரது பையில் கோவில் பிரசாதம் இருக்கிறது என்று சொன்ன பிறகும் அவரை தடுத்து நிறுத்தியதாலும், நீண்ட நேரம் பிரசாதம் இருந்த பையை சோதனை செய்ததாலும் இளையராஜா குடும்பத்தினருக்கும், சோதனை செய்த அதிகாரிகளுக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் வாக்குவாதம் நடந்தது. இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் வந்த பிறகு இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை காரணமாக விமானம் 15 நிமிடம் தாமத மாக புறப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் பயணி கள் அதிருப்தி அடைந்தனர். ‘‘பிரசாதம் இருக்கிறது என்று சொன்ன பிறகும் நீண்ட நேரம் சோதனை செய்தது சரியல்ல’’ என்று கார்த்திக் ராஜா கூறினார். நடந்த சம்பவங்கள் பற்றி கூறிய பாதுகாப்பு அதிகாரி, ‘‘சோதனை செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமை. என்றாலும், நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்’’ என்றார்.


No comments:

Post a Comment

Comment here