Breaking

Monday, June 6, 2016

உடலுறவுக்கு முன் செய்யக்கூடாத 5 சமாச்சாரம்

உடலுறவுக்கு முன் செய்யக்கூடாத 5 சமாச்சாரம்

சமுதாயத்தில் அதிகரித்து வரும் பாப் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக செக்ஸ் விளங்குகிறது. இந்நிலையில் பாலியல் தொடர்பான விஷயங்கள் நிறைய உள்ளன. உடலுறவின் போது செய்யக் கூடாத அடிப்படை விஷயங்கள் குறித்த சில டிப்ஸ்..

வயிறுமுட்ட சாப்பிடுவதை தவிர்க்கவும் :

உடலுறவிற்கு முன்னதாக உட்கொள்ளும் கொழுப்பு, சர்க்கரை சார்ந்த உணவுகளால் பாதியிலேயே தூக்கம் வந்துவிடும். மேலும், வேகமாக இயங்கக் கூடிய நரம்புகள் மூளையை சென்றடையாமல் செக்ஸில் முழு இன்பம் காண முடியாது என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

குடி பானங்களை தவிர்க்கவும்:

அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் குடிபானங்கள், மது ஆகியவை உணர்வுகளை பாதிக்கும் வகையில் மந்தமான நிலை உருவாக்கும். இதனால் உடலுறவின் உச்சத்தை எட்ட முடியாது. எனவே அதனை தவிர்ப்பது நல்லது.

அழகை பற்றி கூடுதல் அக்கறை வேண்டாம் :

சிக்ஸ் பேக் வைத்திருந்தாலும் சரி பருமனான உடல் அமைப்புகள் இருந்தாலும் சரி உடலுறவில் தேவையானது அழகல்ல, முழு ஈடுபாடுடன் செக்ஸை அனுபவிக்கும் திறன் தான் முக்கியம் என வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அந்தரங்க உறுப்பு இறுக்கமாவதை தடுக்கவும் :

ஈஸ்ட்ரோஜென் அளவு குறைந்தால் பெண்ணின் அந்தரங்க உறுப்பு இறுக்கமாகி உடலுறவின் போது குறைவான இன்பத்தையே அளிக்கும். ஆகையால் தண்ணீர் அல்லது சிலிகான் அடிப்படையிலான திரவத்தை பயன்படுத்தலாம்.

சிறுநீர் கழிப்பதை தடுக்க வேண்டாம்(முன்/பின்) :

சிறுநீர்ப்பையில் ஏற்படும் மாறுதல்களால் உடலுறவுக்கு முன்னதாகவே சிலர் சிறுநீர் கழித்துவிடுவார்கள். அப்போதுதான் எந்த இடையூறுமின்றி செயல்பட முடியும். செக்ஸ் முடிந்து சிறு நீர் கழிப்பதனாலும் உடலில் இருக்கும் பேக்டீரியாக்கள் வெளியேறி உடலுறவை ஆரோக்கியமானதாக்கும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Comment here