மாணவியிடம் பேண்டை முழுவதும் இறக்கி காயங்களை காட்ட கூறி சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க எம்.பி

பாரதீய ஜனதா சாக்ஷி மகராஜ் சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்போனவர். தற்போது போலீசார் அடக்குமுறையால் காயமடைந்த மாணவியிடம். அவரது ஜீன்ஸ் பேண்டை முழுவதும் இறக்கி காயங்களை காட்டுமாறு கூறி உள்ளார்.தற்போது இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கபட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாரதீய ஜனதா எம்பி மாணவியின் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து உள்ளார். போலீசார் வழக்கில் அக்கறையின்மை கொண்டால் அவர்கள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.என கூறி உள்ளார்.
இந்த பேச்சுக்காக எம்பிக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து உன்னோவ் தொகுதி எம்.பி. போலீசாரை அச்சுறுத்தும் வகைஅயில் பேசி வருகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்
No comments:
Post a Comment
Comment here