கடலுக்குள் நீந்தும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்
மும்பை - அகமதாபாத் இடையே உள்ள ரயில் பாதை 508 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதில், ரூ. 97,636 கோடி செலவில், 21 கிலோ மீட்டர் நீளத்திற்கு, கடலுக்கு அடியில் ரயில் பாதை அமைக்கப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை - அகமதாபாத் இடையே அமைக்கப்படும் புல்லட் ரயில் திட்டம் ஜப்பான் நிறுவன உதவியுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கான செலவில் 81 சதவீதம் ஜப்பானை சேர்ந்த “ஜப்பான் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் ஏஜென்சி” என்ற நிறுவனம் கடனாக வழங்குகிறது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டம் 2018ஆம் ஆண்டு இறுதியில் துவங்கப்படும். சிக்னல் மற்றும் சக்தி அமைப்பு போன்ற உபகரணங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜப்பானில் இருந்து கொண்டு வரப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை - அகமதாபாத் இடையே உள்ள 508 கிலோ மீட்டர் தூரத்தை புல்லட் ரயில், சுமார் இரண்டு மணி நேரத்தில், அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.
No comments:
Post a Comment
Comment here