Breaking

Saturday, May 7, 2016

ஸ்பைசியான பன்னீர் 65 செய்வது எப்படி

பன்னீர் 65 செய்வதற்கு சிறிது நேரம் பிடிச்சாலும் சாப்பிடும் போது எல்லாமே மறந்து விடும்




தேவையான பொருட்கள் :

பன்னீர் - 300
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 1 1/2 டீஸ்பூன்

ஊறவைக்க :

இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
எழுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 1 அ 2
சில்லி கார்லிக் சாஸ் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

* பன்னீரை சமமான துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பன்னீர், இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், எழுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து 4 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். அடுத்து பிரிட்ஜில் இருந்து எடுத்து 2 மணிநேரம் வெளியில் வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீர் கலவையில் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) மாவை தூவி பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* அடுத்து அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து வைக்கவும்.

* மற்றொரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி இஞ்சி, பூண்டு, சீரகத்தூள், மிளகுத்தூள், ப.மிளகாய் போட்டு நன்றாக வறுக்கவும்.

* அடுத்து அதில் சில்லி கார்லிக் சாஸ், தேவையான உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின் 20 ml தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

* பின்னர் அதில் பன்னீரை போட்டு மசாலா பன்னீரில் நன்றாக ஒட்டுமாறு பிரட்டவும்.

* பன்னீர் மொறுமொறுப்பாக வரும் வரை ஃபிரை செய்ய வேண்டும்.

* பன்னீர் மொறுமொறுப்பாக வந்தவுடன் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையை தூவி பரிமாறவும்.

* சுவையான ஸ்பைசி பன்னீர் 65 ரெடி.

குறிப்பு :

* மசாலா அதிகம் விரும்பாதவர்கள் மசாலா அளவை குறைத்து கொள்ளலாம்.

- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Thanks Maalaimalar News

No comments:

Post a Comment

Comment here