Breaking

Wednesday, April 13, 2016

தெறி விமர்சனம் Theri Movie Review

வித்தியாசமான மூன்று தோற்றத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படமிது. இதில் விஜய்யின் மகள் திவ்யா, மீனாவின் மகள் நைனிகாவும் இணைந்து நடித்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்களை கவரும் எனத் தெரிகிறது.

இவர்களின் எதிர்பார்ப்புகளை தெறி நிறைவேற்றியுள்ளதா என்பதை பார்த்து வருவோமா..?

நடிகர்கள் : விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மொட்டை ராஜேந்திரன், இயக்குனர் மகேந்திரன், பேபி நைனிகா, பேபி திவ்யா மற்றும் பலர்.

இசை : ஜி. வி. பிரகாஷ்

ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

படத்தொகுப்பு : ஆண்டனி எல் ரூபன்

இயக்கம் : அட்லி

பிஆர்ஓ : டைமண்ட் பாபு

தயாரிப்பாளர் : கலைப்புலி எஸ் தாணு

‘கலை புலி’ தானு தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில், ‘இளைய தளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்‌ஷன், பிரபு, ராதிகா.

என்று நட்சத்திர கூட்டமே நடித்திருக்கும் படம் தான் ‘தெறி’. ஜீ.வி.பிரகாஷ் இசையில் வெளிவரும் 50வது படமும் கூட, படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பாடல்களில் மிகவும் கவனம் செலுத்துகின்றேன், இளைய தளபதி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாது எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் ‘தெறி’ படத்தின் பாடல்கள் இருக்கும் என்று சொல்லீட்டே இருந்த நம்ம ஜீ.வி செய்தும் காட்டி இருக்கின்றார். ரைட்டு உங்களின் அவசரம் புரிகின்றது.. சட்டுபுட்டுன்னு விமர்சனத்துக்கு வருமோமா…?

படத்தின் கதையும் சரி, படம் காட்சியாக்கப்பட்டிருக்கும் விதமும் சரி எந்த விதத்திலும் புதுமையானது இல்லை. வழமையான ஒரு கதை கொஞ்சம் வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்து இருக்கின்றார் இயக்குநர் அட்லீ.

எனக்கு என்னவோ படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் Trailer லேயே காட்டி விட்டார்கள் என்று எண்ண தோன்றுகின்றது. அதனால் படத்தின் கதை இதுதான், படம் இப்படித்தான் நகரும் என்று எல்லாம் சொல்லி படத்தின் எதிர்பார்ப்பையும் ரசிகர்களில் ஆவலையும் குலைக்க விரும்பவில்லை.

சாதாரணமான ஒரு கமர்ஷியல் படத்தினை பார்க்க போகின்றோம் என்ற மெண்டலிட்டியுடன் தியட்டருக்கு போய் படத்தை பாருங்க… பெரிதும் எதிர்பார்த்து போனால் பின் விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பேற்காது, ஏன்னடா இவன் ஆரம்பத்திலயே அபசகுணமாக சொல்லுறானேன்னு நினச்சுக்காதீங்க நிலைப்பாடு அப்படித்தாங்கோ இருக்கு..!

அநேகமாக தன் படங்களில் விஜய் ஒரு பாடல் பாடுவது வழக்கம் அதே போல இந்த படத்தில் ‘செல்லக்குட்டி…’ கொரியோகிராபருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல… அவரு ராமராஜன் ரசிகனாக இருப்பார் போல இருக்கு… கலர் கலரா விஜய்க்கு சட்ட போட்டு.. அதை விட கொடுமை விஜயை குள்ளனாக காட்டி.

சமந்தாவே உயரம் காணாதுன்னு பலரு பீல் பண்ணும் போது விஜய்ண்ணா பக்கதில சமந்தா நிக்கும் போது எனக்கு அனுஷ்கா போல பெருசா தெரிஞ்சதுன்னா பார்த்துக்கோங்களேன்.. இல்லீங்க உயரத்தில பெருசா இருக்குன்னு சொல்ல வந்தன்… ஏங்க ஏங்க… அருமையான ஒரு ஆடியோ பாடலை படமாக்க சொதப்பிய இன்னொரு சந்தர்ப்பம் இது. மிகவும் எதிர்பார்த்து போன ‘தெறி’ பாடல்களில் இதுகும் ஒன்று. இந்த பாடல் முடியும் வரை பக்கத்த இருந்த விஜய் ரசிகன் முகத்தை பார்க்கனும் செம கடுப்பாகீட்டான். அடுத்து நான் அதிகம் எதிர்பார்த்த பாடல் ‘ராங்கு…’ விட்ட எல்லாத்துக்கும் வச்சு செஞ்சு இருந்தாங்க… கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சியமைப்பு, பழைய கியூட் விஜய்ண்ணா மீண்டும் பார்க்கலாம்.

நடனத்தில் தான் ஸ்பீட் குறைந்து போய்விட்டதோ என்று எண்ண தோன்றுகின்றது. மத்தப்படி படத்தில் Highlight பாடல் என்றாது ‘ராங்கு…’ தான்..!
அடுத்து மாஸ் ஹீரோன்னா என்ன வேணும்… சொல்லுங்க… என்னங்க வேணும்… கெத்தான சண்டைக்காட்சிகள், செமையா நச்சுன்னு நாலு பஞ்… படத்தின் சண்டைக்காட்சிகளை பார்க்கும் போது புது பொண்டாட்டிய கொஞ்சுமாப்போல இருக்கு… அடின்னா இடின்னு விழும் என்ற ஹீரோட படத்துக்கு எடுத்து இருக்காங்க சண்டை காட்சிகள்.. சரி அதைதான் விடுங்க.. விஜய் குரலில் திருமலை, போக்கிரி போன்ற மாஸ் படங்களில் இருந்த ஒரு மிடுக்கு மிஸ்ஸிங்.

பஞ் ஒன்னு இந்த சீன் முடியும் போது வச்சு இருக்கலாம்ல என்று நமக்கே தோன்றுகின்றது, அந்த இடத்தில் ஏன் இயக்குநருக்கு தோன்றவில்லை. இன்னும் அதிகமாக திரைக்கதையில் அட்லீ அக்கறை காட்டி இருக்கலாம். ‘புலி’ படத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம், அதுகும் பொலீஸ் கெரெக்டர் படம் என்றால் சொல்லத்தேவையில்ல. இருந்தும் ஏன் இந்த அளவு திரைக்கதையில் தொய்வு என்று தெரியவில்லை, விஜய் படம் தானே ஓட்டி விடலாம் என்று நினைச்சு இருப்பாங்க போல இருக்கு…!

படத்தில் ரவுடிகளை அரஸ்ட் பண்ணி… கிளாஸ் எடுப்பாரு பாருங்க… எத்தன கேள்வி… கிளாஸ் போனா வாத்தியார் கேள்வி கேட்கிறார்… வூட்டுக்கு போனாலும் கேள்வி கேட்கிறாங்கன்னு தியட்டருக்கு வந்தா இங்க விஜய்ன்னா…. ‘பூமிக்கு மிக அருகில் இருக்கும் கோள் எது’ என்று கேட்கின்றார். என்ன அண்ணா இப்படி பண்ணீட்டீங்களேண்ணா..!

வெங்கட் பிரபு சூர்யாவின் கால்சீட்டை நாசம் செய்து எடுத்த படம் ‘மாஸ்’ மாஸ் பொலீஸ் படமா எடுகிறன் என்று விஜயை ஏமாத்தி எடுத்த படம் தான் ‘தெறி’.. சும்மாவே சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்களுக்கு எண்டடென்மெண்ட் விஜய் ரசிகர்கள் தான் என்ற பேச்சு பரவலாக இருக்கின்ற இந்த நிலையில் இப்படியான ஒரு படம் ‘தெறி’ இனி சொல்லவே தேவை இல்லை. தமிழ் புதுவருடத்தை கொண்டாடி கொண்டாடி டேக் போட்டு கலாய்ப்பாங்களே.. அத நினைக்கும் போதுதான் குப்புன்னு வேர்க்குது…!

படத்தின் ப்ளஸ் எந்த படத்திலும் இல்லாதது போல எமி மிகவும் அழகாக இருக்கு… அளவா டிரஸ் போடாமல் போதுமான அளவு போட்டிருக்காங்க… இப்படி நான் சொல்லீட்டனேன்னு மனச விட்டிட கூடாது பாடல்களில் எல்லாம் தாரளம் தான்.

விஜய் சொன்னது போல எமி பாடல்களை பொறுத்தவரைக்கும் ‘குல்பி புள்ள’ தான்… எவண்டா அது ‘அப்ப வச்சு சப்பி இருக்காரா’ன்னு கேட்கிறது..? தக்காளி இன்னொருக்கா ‘தெறி’ படம் பார்க்க வச்சிடுவன் பார்த்துக்க…!

படத்துக்கு இவ்வளோ மார்க் அவ்வளோ மார்க் என்று நானும் விஜய்ண்ணா போல குச்சிய தூக்கீட்டு வரமாட்டேங்க, கலகலப்பா பார்க்கலாம், அப்பா மகள் காட்சிகள் செம, சந்தா விஜய் கெமிஸ்ரி வேற லெவல், எமி டக்கரூ தூள்…இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சுறுசுறுப்பை அதிகரித்திருக்கலாம். முதல்பாதியில் பாடல்களை குறைத்து இருக்கலாம். விஜய்க்கு இன்னும் பில்டப் கொடுத்து இருக்கலாம்… மத்தப்படி படம் எல்லாம் ப்ளாப் இல்லீங்கோ… கம்ர்ஷியல் ஹிட் கட்டாயம்…!

No comments:

Post a Comment

Comment here