இந்தி பட உலகின் பிரபல நடிகரான ஹிருத்திக்ரோஷனும், ‘தாம்தூம்’ படத்தின் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கங்கனா ரணாவத்தும் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் பரவின. இதனால் ஹிருத்திக்ரோஷன், அவரது மனைவி சூசனுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரும் விவாகரத்து செய்துகொண்டதாக தெரிகிறது.
ஆனால் சமீபகாலமாக ஹருத்திக்ரோஷன், கங்கனா ரணாவத் இடையே சுமுக உறவு இல்லை. இந்த நிலையில் சமூக வலைதளம் வழியாக கங்கனா ரணாவத்தை மனநோயாளி என்று கூறி ஹருத்திக்ரோஷன் பரப்பி வருதாக தகவல் கசிந்தது.
இதானல் ஆத்திரமடைந்த கங்கனா ரணாவத் ‘ எனது முன்னாள் காதலர் ஏன் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார் ’ என்று கேள்வி ஏழுப்பினார்.
இது ஹிருத்திக்ரோஷனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கங்கனா ரணாவத்திற்கு அவர் வக்கீல் நோட்டீசு அனுப்பினார்.
மேலும் மும்பை சைபர் கிரைம் போலீசில், ‘ தன் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் மர்மநபர் எனது பெயரை பயன்படுத்தி போலியான இ–மெயில் கணக்கை உருவாக்கி பயன்படுத்தி வருவதாகவும், அவர் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் தன் ரசிகர்கள் உள்பட பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் ’ புகார் அளித்திருந்தார்
இந்த நிலையில் ஹிருத்திக்ரோஷன் போலி இ–மெயில் முகவரி தொடர்பாக ஒரு வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கங்கனா ரணாவத் மற்றும் அவரது தங்கை ரங்கோலி ஆகியோருக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் நேரில் ஆஜராக அவர் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்று அளித்துள்ளார். ஹிருத்திக் ரோஷன் தனது அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு வருவதாக கங்கனா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
Comment here