Breaking

Tuesday, March 29, 2016

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடந்தது என்ன?

திரையுலகில் அண்மைக் காலமாக மீண்டும் பட வாய்ப்புகள் பெற்று அடுத்த சுற்றில் வலம் வரும் நடிகை நயன்தாராவுடன் உதயநிதிக்கு காதல் பிரச்னை இருப்பதாகவும், அதனால் அவர் மனவருத்தத்தில் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒரு வலைத்தளத் தகவலும் சமூக வலைத்தளங்களில் செய்திகளும் வேகமாகப் பரவின.

உதயநிதி மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது தற்கொலை முயற்சி குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்ததாகவும் சமூக ஊடகங்களில் இன்று காலை முதலே பரவலாக விவாதிக்கப்பட்டது.

உதயநிதி, ஸ்டாலின் இருவரும் இணைந்து வேலன் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்த போது இருவரும் இணைந்து, பழனி மலைக் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.

அப்போது, ஊடகங்களில் இந்தத் தகவல் பரவியது. இதை அடுத்து, குடும்பத்தின் மூத்தவரான கருணாநிதி, உதயநிதியை அழைத்து கண்டித்ததாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், முதல் படத்தில் துவங்கிய இவர்களின் நெருக்கம் இரண்டாவது படத்திலும் தொடர்ந்தது. உதயநிதி, இந்தப் படத்திலும் நயன்தாராவையே ஜோடியாக்கினார்.

இந்த நட்பே அவருக்கு நாளடைவில் நயன்தாரா மீது காதலாக மாறிவிட்டதாம். ஆனால், நயன்தாரா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படவே, உதயநிதி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

அந்நேரம், உதயநிதிக்கு நெருக்கமான நடிகர் ஒருவர், அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், இப்படிச் செய்தி வெளியானதால், உதயநிதி ஆதரவாளர்கள் பெரும் கொந்தளிப்படைந்தனர். இதனால் சென்னையில் சில இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவல் பணியில் போலீஸார் அதிக அளவில் ஈடுபடுத்தப் பட்டனர்.

இதுப்பற்றி அவர்கள் இருவரது பின்னணியில் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரித்தோம், அவர்கள் சொன்ன விபரம் முழு விபரமாக இங்கே....

அரசியல் பின்னணியோடு, ரெட் ஜெயண்ட் பெயரில் ஆதவன், குருவி, 7ம் அறிவு, உள்ளிட்ட பல படங்களை தயாரித்தும், பல படங்களை வெளியிட்டவர் உதயநிதி ஸ்டாலின். ஜீவாவின் , வா மனசில சக்தி பார்த்துவிட்டு தாமும் நடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார் , ஏற்கனவே பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை வெளியிட்டதால் ,இயக்குனர் ராஜேஷ் அறிமுகம் இருந்ததால் , ஒரு கண்ணாடி படத்தில் உதய நிதி ஹீரோவாக அறிமுகமாகினார் . அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்தார். அந்தப்படமும் ஹிட்டாக அமைந்தது. பிறகு இது கதிர்வேலன் காதலன் படத்தில் நடித்தார்.

இதில் நயன்தாரா தான் அவருக்கு ஜோடி, ஏற்கனவே ஆதவன் படம் தயாரித்தபோது, நயன்தாராவின் பழக்கம் இருந்ததால் இந்தப்படத்தில் ஹீரோயினாக கமிட் பண்ணினார் உதயநிதி. இப்படம் வெளிவந்த நேரத்திலேயே மீண்டும் நயன்தாராவை தனது அடுத்தபடமான நண்பேன்டா படத்தில் கமிட் செய்தார் உதயநிதி. ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் காரைக்குடி, சென்னை போன்ற இடங்களில் நடந்து வருகிறது. இங்கு தான் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதேசமயம் நயன் - உதயநிதி பிரச்னை எங்கே தொடங்கியது என்ற தெரியவில்லை. வழக்கமாக இருவரும் சகஜமாக பேசி கொண்டு இருந்தவர்கள் இப்போது பேசி கொள்வதில்லையாம். இதற்கிடையே நயன்தாரா கையை கிழித்து கொண்டதாகவும், உயதநிதி தூக்க மாத்திரை சாப்பிட்டதாகவும் ஒரு தகவல்.

இது உண்மையா, இல்லையா என்பது பற்றி விசாரிக்க அவர்களை தொடர்பு கொண்டோம். ஆனால் முடியவில்லை, இருந்தாலும் அவர்களை வைத்து படம் இயக்கிய சக நண்பர்களிடம் இதுப்பற்றி விசாரித்தோம், அவர்கள் சொன்ன தகவல்கள் இதோ...

இயக்குநர் அட்லீ கூறியதாவது, இயக்குனர்கள் அதிகமாக விரும்பும் நடிகை நயன்தாரா. செட்டில் ஏதுவும் பேச மாட்டார் , நட்புடன் அனைவரிடமும் பழகுவார். ஷூட்டிங்கிற்கு நேரத்தோடு வருவார், நேரத்தோடு செல்வார், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார், உதயநிதியுடன் அவரை பற்றி வெளியாகி இருக்கும் செய்தி முற்றிலும் தவறானது என்கிறார்.

பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில், இயக்குநர் ராஜேஷ், நயன்தாராவுடன் வொர்க் பண்ணியதால் , நயன்தாரா - உதயநிதி பற்றி அவரிடம் கேட்டோம், அவர் கூறுகையில், இந்த செய்தியே முதலில் தவறானது. உதயநிதி பின்னாடி தத்தா, அப்பா என குடும்பம் முழுவதும் அரசியல் பின்னணி இருந்ததால் எந்த ஒரு விசயத்திலும் ரொம்ப கவனமாக இருப்பார். மனைவி மற்றும் குழந்தைகளிடம் அன்பாக இருப்பார் , சினிமாகாரர்களை வைத்து பேர் எடுத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார் . ஓகே ஓகே.,யில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்தாலும், ஹன்சிகாவுடன் மரியாதையோடு பழகினார், எப்போதும் அவரது வேலையில் கவனமாக இருப்பார் என்கிறார் ராஜேஷ்.

கோடம்பாக்கத்தை தற்போது பரபரப்பாக்கி இருக்கும் இந்த செய்திக்கு எப்படியும் இருவரும் மறுப்பு தான் சொல்லப்போகிறார்கள், இருவரும் இரண்டொரு நாளில் இதற்கு விளக்கம் சொல்லி இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என தெரிகிறது.

பேரும் புகழும் சம்பாதிக்கும் நட்சத்திரங்களை பலரும் படத்தில் மட்டும் அல்ல, நிஜத்திலும் பெரிய அளவில் எதிர்பார்கின்றனர். அவர்களை செய்திகளாக்குவதும் , நட்சத்திரங்கள் செய்திகள் ஆவதும் அவர்கள் கையில் தான் இருக்கிறது. இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் உண்மை ஒரு நாள் வெளியில் வரும்.

No comments:

Post a Comment

Comment here