வடக்கு கிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் பகுதியில் 20 வயது பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. பெண்ணுக்கு நேற்றுதான் திருமணம் நடைபெவதாக இருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மயக்க நிலையில் இருந்த இளம் பெண்ணை அவரது தாயாரும், சகோதரரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளனர்.இதில் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளது. போலீசார் வந்து விசாரணை நடத்தி உள்ளனர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்து உள்ளன அதன் விவரம் வருமாறு:-
அந்த குடும்பத்தினர் மீரட் நகரை சேர்ந்தவர்கள். இளம் பெண்ணுக்கு காஸியாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்யபட்டது.இளம் பெண்ணின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இளம்பெண்ணுக்கு அவர்கள் வீட்டில் குடியிருந்து வந்த ஒரு வாலிபருக்கு தொடர்பு இருந்து உள்ளது.
இந்த நிலையில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததால் வீட்டில் உறவினர் கூட்டம் வேறு இருந்தது. வெளியில் சென்று இருந்த தாயார் வீட்டுக்கு திரும்பி வந்து புதுப்பெண்ணை தேடி உள்ளார். ஆனால் அவர் இல்லை. அருகில் தனது வீட்டில் குடியிருந்தவர் அறிக்கு சென்று பார்த்து உள்ளார் அங்கு மகள் அந்த வாலிபருடன் தகாத கோலத்தில் இருந்து உள்ளார். இதை பார்த்து தாயார் சத்தம் போட்டு உள்ளார். இதை பார்த்து வாடகைக்கு இருந்தவர் ஓடி விட்டார்.
ஆவேசம் அடைந்த தாயார் அங்கு படுக்கையில் இருந்த தலையணையை எடுத்து மகளின் முகத்தில் அழுத்தி கொலை செய்தார். பின்னர் தனது மகனை வரவழைத்தார். உறவினர்களிடம் மகளுக்கு மாரடைப்பு என சொல்லி விட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார்.என தெரிய வந்து உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை கைது செய்து உள்ளனர்.

No comments:
Post a Comment
Comment here