Breaking

Saturday, March 19, 2016

ரஷிய விமான விபத்தில் 62 பேர் பலி: கேரள தம்பதியும் இறந்த பரிதாபம்

துபாயை சேர்ந்த பிளை துபாய் விமான நிறுவனம், துபாயில் இருந்து ரஷியாவில் உள்ள ரோஸ்டவ் ஆன் டான் நகருக்கு விமானம் இயக்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் ஒன்று நேற்று இந்திய நேரப்படி இரவு 11.50 மணிக்கு 55 பயணிகளுடனும், 7 சிப்பந்திகளுடனும் துபாயிலிருந்து ரஷியாவில் உள்ள ரோஸ்டவ் ஆன் டான் நகருக்கு புறப்பட்டு சென்றது.

அங்கு இந்த விமானம் தரை இறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகி சென்று வெடித்து சிதறி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 62 பேரும் உயிரிழந்தனர். பலியான பயணிகளில் 2 பேர் இந்தியர்கள், 44 பேர் ரஷியர்கள், 8 பேர் உக்ரைன் நாட்டினர், ஒருவர் உஸ்பெகிஸ்தான் என துபாய் தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் பலியான 2 இந்தியர்களும் கேரளாவை சேர்ந்த தம்பதி என தெரியவந்துள்ளது.

அவர்கள் கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்த ஷியாம் மோகன் (வயது 32), அவரது மனைவி அஞ்சு (25) ஆவார்கள். ஷியாம் ரஷியாவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையை கேரளாவில் கொண்டாடிவிட்டு ரஷியாவுக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியாகிவிட்டனர்.

No comments:

Post a Comment

Comment here